உலகளந்த பெருமாள் கோவில் மூலவருக்கு தைலக்காப்பு விழா
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலவருக்கு ஜேஸ்டாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு பெருமாள் 15 நாட்களுக்கு திருமுக சேவையில் அருள் பாலிக்கிறார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாளுக்கு இன்று (12 ம் தேதி) தைலக்காப்பு எனப்படும் ஜேஸ்டாபிஷேகம் நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு மகா சாந்தி ஹோமம், 10 மணிக்கு தைல பிரதிஷ்டை, 10.30 மணிக்கு சந்தனாதி தைலம் மூலவருக்கு சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் சிறப்பு மகா சாந்தி திருமஞ்சனம், மகா பூர்ணாகுதி, நான்காயிர திவ்யபிரபந்த சேவை சாற்று மறை நடக்கிறது. இன்று முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு பெருமாள் திருமுக மண்டல சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.