நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பு பணி தீவிரம்!
கடலூர்: கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நவராத்திரி விழா கொண்டாடுவதற்காக கொலு பொம்மைகள் தயாரிப்பு பணியில் கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். களிமண், காகித கூழ் ஆகியவற்றால் பொம்மைகள் செய்யப்படுகின்றன. ராமாயணம், மகா பாரதம், கிருஷ்ணரின் லீலைகள் சம்பந்தமான கதைகளை விளக்கும் வகையிலான பொம்மைகளை தயாரித்து, அதற்கு பல்வேறு வர்ணங்களை பூசும் பணியில் தொழி லாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொம்மை தயாரிக்கும் கார்த்திகேயன் என்பவர் கூறுகையில், ‘நவராத்திரி கொண்டாட தேவையான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. இப்பணிகள் ஆகஸ்டு மாதம் முடிந்ததும் பொம்மைகள் தமிழகம் மட்டு மின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதேப் போன்று, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தேவையான பொம்மைகளும் தயாரித்து அனுப்பப்படும்’ என்றார்.