விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலை தயாரிக்கும் பணி தீவிரம்!
காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி வேகமாக நடந்தது வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.17ம் தேதி கொண்டாடபட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக காரைக்காலில் பல்வேறு இடங்களில் பேபர் மற்றும் மாவு கூழால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தி கடலில் விடுவர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கும் பணி காரைக்காலில் வேகமாக நடந்து வருகிறது. நிரவி மெயின் ரோட்டில் காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகளின் ஒருங்கினைப்பாளர் சிவசுப் ரமணியன், விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார். சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் பேப்பர் மற்றும் கிழங்கு மாவு கூழ் கொண்டு விநாயகர் சிலையயின் பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. பின், ஒவ்வொரு பாங்களாக இணைத்து இறுதியில் சிலைக்கு வர்ணம் பூசப்படுகிறது. விநாயகர் சிலைகள் மயில், அன்னம், தாமரை மலர், சிங்க வாகனம், மூஞ்சுறு, ரிஷப வாகனம் என பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை தயாரிக்கப்படுகிறது. நிரவியல், சிலைகள் 3 அடி முதல் 12 அடி வரை தயாரிக்கப்படுகிறது. காரைக்காலில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் நாகப்பட்டினம், வேதாரண்யம், சீர்காழி, திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு அனுப்படுகிறது. இந்த ஆண்டு 500 விநாயகர் சிலைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சிவசுப்ரமணியன் தெரிவித்தார்.