உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித அந்தோனியார் ஆலய மின் அலங்கார தேர்பவனி!

புனித அந்தோனியார் ஆலய மின் அலங்கார தேர்பவனி!

காரைக்கால்: காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள புனித அந்தோனியார் ஆலய ஆண்டுத்திருவிழாவில்  மின் அலங்கார தேர்பவனி நடந்தது. காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள அந்தோனியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறிய தேர்பவனியுடன் கொடி ஆலயத்தைச் சுற்றி வந்து ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவில் முக்கிய நிகழச்சி நேற்று முன்தினம் பெருவிழா திருப்பலியும், மின் அலங்கார தேர்பவனியும், தேவநற்கருணை  நிகழ்ச்சியும் நடந்தது. காமராஜர் சாலை, திருநள்ளார் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் தலைமையில், புனித அந்தோனியார் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !