கலியுகத்தின் இயல்பு!
ADDED :3746 days ago
பொய்யுரை பகர்ந்திடினும் உயிர்வதைத்து என்றுமே
புலால்மது புசிப்பர் எனினும்
பூசைசெய் பெரியோரை அவமதித்து அவர்உளம்
புண்பாடு செய்வர் எனினும்
நொய்யவரு ணத்தவர்கள் ஆயினும் அனாசார
நோன்புடையர் எனினும் அழல்கால்
நோக்கஞ்சி வந்துட்சி னத்தெளியர் கவிஞரை
நொடித்துநொய் தவிடும் ஈயா
வெய்யபா தகர்எனினு மிகுகுடி கெடுப்பதே
விரதம் உடையவர் என்னினும்
வெகுபணக் காரர்தமை எவருமிக் கவர்என்று
வினவுகலி மகிமை ஐயா
செய்யவுன திருசரண மறவாத மனமொடத்
தீயர்முன் உறாதருள் செய்வாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.