சிவபூஜையில் கரடி என்றால் என்ன?
ADDED :5235 days ago
பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவபூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும்போது, கரடி வாத்தியம் வாசிக்கச்செய்வர். இதைத்தான், சிவ, பூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.