செல்வ விநாயகர், காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :3850 days ago
வடமதுரை: அய்யலூர் கந்தமநாயக்கனூரில் செல்வ விநாயகர், காளியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. அம்மன் கரகம் பாலித்து சன்னதி வந்ததும், அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபட்டனர். மூன்று நாளான நேற்று மஞ்சள் நீராட்டுடன் அம்மன் கங்கை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. விழா ஏற்பாட்டினை கந்தமநாயக்கனூர், கிருஷ்ணப்பநாயக்கனூர், பாலகட்டிநாயக்கனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.