மயிலம் பொம்மபுர ஆதீனத்தில் புதிய நூல் வெளியீட்டு விழா
ADDED :3771 days ago
மயிலம்: மயிலம் பொம்மபுர ஆதீன மடத்தில் புதிய நூல் வெளியீட்டு விழா நடந்தது.மயிலத்தில் பாலசித்தர் குரு பூஜை, நூல் வெளியீட்டு விழா நடந்தது. மயிலம் 20ம் பட்ட சிவஞானபாலய சுவாமிகள் குரு பூஜை விழாவுக்கு தலைமை தாங்கினார். சென்னை கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை தலைவர் ராசகோபாலன் சிறப்புரையாற்றினார். திருப்பூர் தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி ‘மயிலம் முருகன் அருட்பனுவல்கள்’ என்ற நூலை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை மயிலம் ஆதீனம் பெற்றுக் கொண்டார். விழாவில் திருமடத்தை சேர்ந்த விஸ்வநாதன், கல்லூரி முதல்வர்கள் விஜயகாந்தி, தமிழரசன், துணை முதல்வர் திருநாவுக்கரசு கலந்து கொண்டனர்.