ஞான விநாயகர் கோவிலில் சிவ பூசகர்களின் பூஜை!
ADDED :3849 days ago
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் ஞான விநாயகர் கோவிலில் சிவ பூசகர்களின் சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி ஞான விநாயகருக்கு சிற ப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நெய்வேலி சிவ சிதம்பர கந்தசாமி சிவாச்சாரியார் தலைமையில் விழுப் புரம், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சிவ பூசகர்கள் பூஜை செய்தனர். பன்னிரு திருமுறை பாடல்பாடி மகா தீபாராதனை நடந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கண்ணன், ராதாகிருஷ்ணன், முத்தையன் செய்தனர்.