லோகாம்பாள் அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்!
ADDED :3771 days ago
கடலூர்: கடலூர், புதுப்பாளையம் லோகாம்பாள் அம்மன் கோவிலில், நாளை (17ம் தேதி) சாகை வார்த்தல் உற்சவம் நடக்கிறது. கடலூர், புதுப்பாளையத்தில் உள்ள லோகாம்பாள் அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நாளை (17ம் தேதி) சாகை வார்த்தல் உற்சவம் நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை 8:00 மணிக்கு கெடிலம் நதிக்கரையில் இருந்து கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு வீரனுக்கு கும்பம் கொட்டும் உற்சவமும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.