திருமலை கோவில் பொக்கிஷத்தில் ஆபரணங்கள் சரிபார்ப்பு
ADDED :5219 days ago
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் சுவாமிக்கு சொந்தமான ஆபரணங்களை சரிபார்த்து கணக்கிடும் பணி தொடங்கியது. திருமலை கோவில் பொக்கிஷத்தில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்கள், பொக்கிஷத்தில் உள்ள ஆவணங்களின்படி உள்ளதா என்பதை, தேவஸ்தான அதிகாரிகள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசீலனை செய்வது வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம், ஆபரணங்களை கணக்கிடும் பணி, அப்போது தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரியாக இருந்த பாஸ்கர் மேற்பார்வையில் தொடங்கப்பட்டது. அவர் திடீரென மாற்றலாகிச் சென்று விட்டதால், அப்பணி நின்று போனது. தற்போது தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று பணியாற்றி வரும் கே.எஸ்.சீனிவாச ராஜு மேற்பார்வையில், கோவில் பொக்கிஷத்தில் உள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்களை பரிசீலனை செய்யும் பணி மீண்டும் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது.