உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினெட்டாம் படியான் பாமாலை

பதினெட்டாம் படியான் பாமாலை

ஐயன் திருக்கோவில் அதிகாரம் பெற்றவனே
கையில் அரிவாள் கதையோடு நிற்பவனே
மெய்யாய் உனையன்றி வேறார் துணை காணேன்
துய்யத் துணை யாவாய் பதினெட்டாம் படிக் கருப்பே

மாலை அழகுடைய மார்பைப் புகழ் வேனா
காலைப் புகழ்வேனா கண்ணிரண்டைப் புகழ்வேனா
மூலைப் பிசாசை முனியை வெருட்டவரும்
சோலை மலை ஆலும் பதினெட்டாம் படிக் கறுப்பே

அதிரும் சுழலும் அதட்டி வரும் குரலும்
எதிரும் பகையை எரிக்கும் விழிச் சிவப்பும்
உதறி எழும் தண்டும் உடைய பெருமானே
துதித் தேன் துணையாவாய் பதினெட்டாம்படிக் கறுப்பே

காட்டில் குடியிருப்பாய் மாத்தூரார் குடிக்கோவில்
வீட்டில் எழுந்தருளி வேண்டும் வரமளிப்பாய்
பாட்டில் நடந்து பகையின் பழவினையின்
சூட்டைத் தணிப்பாய் நீ பதினெட்டாம் படிக் கறுப்பே

பாதி இரவில் பகல் உச்சி சந்திகளில்
பேதை அழைத்தவுடன் பின்னோடி வருபவனே
எது பிழை செய்திடினும் ஏழைக் கிரங்கிடுவாய்
சோதி பரப்பி வரும் பதினெட்டாம் படிக் கறுப்பே

எது நினைத்தாலும் எப்போது சொன்னாலும்
ஆதரித்து நல்கும் அருள் உடைய என்ஐயா உன்
பாதம் தலைக்கொண்டு பாடுகிறேன் வஞ்சகரின்
சூது தொலைத்து அருள்வாய் பதினெட்டாம் படிக் கறுப்பே

கருமா முகிலுடையான் கைச் செண்டு போன்றவனே
திருமால் பதினெட்டுத் திருப்படியும் வாழ்பவனே
வருவாய் அடியேனை வாழ்விப்பாய் பொன் மாரி
சொரிவாய் சொரிவாய் நீ பதினெட்டாம் படிக் கறுப்பே

வைத்த தகடு மனையில் இட்ட சூனியங்கள்
எய்த்து நலிய இடு மருந்தால் இன்னலுற்றே
கைத்த குடிகளை நீ காப்பாற்று காப்பாற்று
சொத்து சுகம் நீயே பதினெட்டாம் படிக் கறுப்பே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !