உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஸ்ரீசக்ரா பூஜை!

விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஸ்ரீசக்ரா பூஜை!

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோவிலில் நேற்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீசக்கரா மற்றும் ராகுகால பூஜைகள் நடந்தது. திருவாரூர் அருகே விளமலில் மதுர பாஷினி அம்பிகை சமேத பதஞ்சலி மனோகர் திருக்கோவிலில் சிவனுக் குரிய அனைத்து பூஜைகளும் வெகு விமர்சியாக நடந்து வருகிறது.  நேற்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு ஸ்ரீசக்கரா மற்றும் ராகுகால பூஜைகள் வெகு விமர்சியாக நடந்தது. முன்னதாக திருமஞ்சனம், தேன், பால் உள்ளிட்ட திரவியங்கம் மற்றும் நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் முற்றும் ஆராதவை வெகு விமர்சியாக நடந்தது. கோவில் சிவாச்சாரயர் சக்தி சந்திரசேகர் பல்வேறு பூஜைகள் நடத்தி பக்தர்க ளுக்கு பிரசாதங்கள் வழங்கினார். இந்த பூஜையில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிர கணக்கானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று தியாகராஜர், ஆலங்குடி குருபகவான், சேந்தமங்கலம் தட்சிண காளி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !