வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4092 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆனி மாதம் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாரதனையும் நடந்தது. ருக்மணி சத்யபாமா சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். அருள்தரும் ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார்.