மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3706 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3706 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில், பக்தர்கள் சாட்டையடி வாங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை, ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவம், கடந்த மாதம் 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வேத வியாசர் பிறப்பு, கர்ணன், தர்மர், கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சி கள், கர்ணன், தர்மர் மகுடாபிஷேகம், அம்மன் பிறப்பு, அர்ச்சுணன் வில் வளைப்பு, அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று தீ மிதி உற்சவத்தையொட்டி, மணிமுக்தாற்றிலிருந்து மாலை 4:00 மணியளவில் Œக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, ஏராளமானோர் தீ மிதித்னர். அதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
3706 days ago
3706 days ago