உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஐந்து பேட்டரி வாகனம் நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஐந்து பேட்டரி வாகனம் நன்கொடை

திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ்-ன் எம்.டி பால ராமஜெயம் நேற்று காலை ரூ.33 லட்சம் மதிப்புள்ள ஐந்து பேட்டரி பக்கி வாகனங்களை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இதற்காக, நன்கொடையாளர் ஸ்ரீவாரி கோயில் முன் சிறப்பு பூஜைகள் செய்து, தேவஸ்தானத கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் சாவியை ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !