உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா!

ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா!

சிதம்பரம்: அனந்தீஸ்வரர் கோவில் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி அம்மன் வீதி <உலாக் காட்சி நேற்று முன்தினம்  இரவு நடந்தது. சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் தெரு ஓம் சக்தி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா கடந்த 15ம் தேதி காப்புக்கட்டி துவங்கிய து. இதனையொட்டி மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகளுடன் சிறப்பு வழிப்பாடு நடக்கிறது. இரவு  காத்தவராயன் கதை சொல்லும் சொற்பொழிவும், அம்மன் வீதி உலாக்காட்சியும் நடக்கிறது. நேற்று முன்தினம் 4ம் நாள் உற்சவம் அனந்தீஸ்வரர்  கோவில் இளைஞர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்லக்கு வீதியுலாக் காட்சி நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைப்பெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். இதில் கோவில் நிர்வாகிகள்  இளைஞர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !