உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகாஞ்சலி நாட்டியாலய 22ம் ஆண்டு விழா!

யோகாஞ்சலி நாட்டியாலய 22ம் ஆண்டு விழா!

புதுச்சேரி: புதுச்சேரி யோகாஞ்சலி நாட்டியாலத்தின் 22ம் ஆண்டு விழா, ஆனந்த ஆசிரமத்தின் 47வது ஆண்டு விழா முத்தியால் பேட்டை சுபலட்சுமி மகாலில் நேற்று நடந்தது. யோகாஞ்சலி நாட்டியாலய இயக்குனர் மீனாட்சி தேவி பவானி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். யோகாஞ்சலி நாட்டியாலய தலைவர் டாக்டர் ஆனந்த பால யோகி பவனானி முன்னிலை வகித்தார்.துவக்க நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளின் கர்நாடக இசை, கொடி நடனம், யோகா செயல் முறை விளக்கம், கிராமிய நடனம், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் தியாகராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். விஸ்வேஸ்வரன் எம்.எல்.ஏ., கலைபண் பாட்டு துறை இயக்குனர் ராகினி, பட்டாபிராமன், அர்த்தநாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். யோகாஞ்சலி நாட்டியாலய பொது மேலாளர் சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !