ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை!
ஸ்ரீவில்லிபுத்தூர்;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.ஆண்டாள் பிறந்த ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் இக்கோயிலில் தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்தாண்டு ஆடி மாதம் இரு பூரம் நட்சத்திரம் வருவதால் இரண்டாவதாக ஆக.,16ல் வரும் பூரம் நட்சத்திரத்தில் தேரோட்டம் நடக்கிறது. நேற்று ஆடி மாதம் முதல் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளி குறடு மண்டபத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் எழுந்தருளி அபிஷேகங்கள், பூஜை நடந்தன. மாலை 4.30 மணிக்கு ஆண்டாள் நந்தவனத்தில் எழுந்தருளினார். பட்டர்கள் பாலாஜி, கிருஷ்ணன் , ஸ்தானிகம் ரமேஷ், சுதர்சனன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வேதபிரான் பட்டர் அனந்தராமன்,""சில ஆண்டுகளில் பூர நட்சத்திரம் ஆடி மாதத்தில் இருமுறை வரும். அது மிகவும் விசேஷமான நாளாகும். இந்த ஆண்டு ஆடி மாதம் இரு நாட்களில் பூரம் நட்சத்திரம் வருகிறது. இரண்டாது நட்சத்திரத்தில் தேரோட்டம் நடக்கிறது,என்றார்.