விஸ்வநாதசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்!
ADDED :3746 days ago
சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசுவாமி விசாலாட்சி அம்பாள் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக. 3 வரை நடைபெறும் திருவிழாவில் விசாலாட்சி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு தினமும் காலை ஊஞ்சலில் புறப்பாடு செய்கிறார். இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜூலை 28ல் சட்டத்தேரில் எழுந்தருள்கிறார். ஜூலை 31 இரவு, புஷ்ப பல்லக்கில் அம்பாள் மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையாளர் கவிதா பிரியதர்ஷினி, நிர்வாக அதிகாரி முருகன் செய்துள்ளனர்.