உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் புதியதேர் வெள்ளோட்டம்

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் புதியதேர் வெள்ளோட்டம்

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.இக்கோயிலில் ஆடி மாதத்தில் 13 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தேரோட்டம் முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. கடந்த திருவிழா வரை பயன்பாட்டில் இருந்த தேர் 70 ஆண்டுகள் பழமையானது. இதனால் புதிதாக ரூ.27.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அச்சுத்தேர் உருவாக்கும் பணி நடந்தது. எரியோடு தண்ணீர்பந்தம்பட்டி தொழிற்பேட்டையில் இரும்பு, தாமிரத்தினாலான 5 டன் எடை, 13 அடி அகலம் கொண்ட தேர் அச்சு, சக்கரங்கள் தயாரிக்கப்பட்டன. வடக்கு ரதவீதி தச்சுக்கூடத்தில் 6 டன் எடையுள்ள தேக்கு, இலுப்பை, நாவல் மரங்களை கொண்டு தேரின் மேலடுக்கு மர வேலைகள் நடந்தன. புதிய தேர் பணி முடிந்து, கடந்த 15ம் தேதி தேரடி நிலைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை புதிய தேரில் ஸ்ரீ விஷ்வக்சேனர் அமர்ந்ததும், சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் மாலை 6.45 மணிக்கு பக்தர்களின் "கோவிந்த கோஷத்திற்கு இடையே, வெள்ளோட்டமாக பக்தர்கள் தேரை இழுத்து வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !