விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்!
ADDED :3813 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் இருந்து தி கரகம் புறப்பட்டு ஊர்வலமாகச் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மதியம் சாகை வார்த்தல் நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.