உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் இன்று முதல் சொற்பொழிவு

ஐயப்பன் கோவிலில் இன்று முதல் சொற்பொழிவு

திருப்பூர் ·:ஸ்ரீஐயப்ப பக்த ஜன சங்கம் மற்றும் ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் சார்பில், திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோவிலில், இன்று முதல் வரும், 28 வரை, ஸ்ரீமத் பாகவத புராண சொற்பொழிவு மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தினமும் காலை, 6:30 மணிக்கு சங்கல்பம், 7:00 முதல் 11:30 வரை, மூல பாராயணம், பகல், 12:30க்கு தீபாராதனை நடக்கும். மாலை, 6:00க்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், 6:30ல் இருந்து, 8:30 வரை, ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு நடைபெற உள்ளது; கடலூர் முரளிதர சர்மா, சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘ஸ்ரீமன் நாராயணனின், 18 புராணங்களில் கடைசியாக எழுதப்பட்டது, ஸ்ரீமத் பாகவத மகாபுராணம். இதை கேட்பதால், குல தெய்வமும், முன்னோர்களும், தேவதைகளும் திருப்தி அடைகின்றனர். கிருஷ்ண பகவானின் அருள், பரிபூரணமாக கிடைக்கும்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !