தேசம்மன் சிறப்பு பூஜை மற்றும் வீதியுலா!
ADDED :3735 days ago
நகரி: ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி, தேசம்மன் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் வீதியுலா, நேற்று நடந்தன.சித்துார் மாவட்டம், நகரி அடுத்த டி.ஆர்.கண்டிகை கிராமத்தில், தேசம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், உற்சவர் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று, ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இதையடுத்து, நகரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, உற்சவர் தேசம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.