உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி நாகலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி நாகலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி: நாகலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.திருத்தணி, எம்.ஜி.ஆர்., தெருவில் நாகலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் மற்றும் நான்கு கால பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம், காலை 9:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, நாகலம்மன் சிலைகள் மீது கலசநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !