பதாள அய்யனாரப்பன் கோவில் ஆடி உற்சவம்!
ADDED :3734 days ago
மரக்காணம் :மரக்காணத்தில் பதாள அய்யனாரப்பன் கோவில் ஆடி உற்சவம் நடந்தது. மரக்காணம் பேரூராட்சியில் கோணவாயன்குப்பம் கிராமத்தில் உள்ள பூரணி, பொற்கலை பதாள அய்யனாரப்பன் கோவிலின் 15ம் ஆண்டுஆடி உற்சவம் துவங்கியது. கோவிலில் விநாயகர், முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலையில் பூரணி பொற்கலை பாதாளஅய்யனாரப்பன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 20ம் தேதி பகல் 12 மணிக்கு அய்யனாரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு பூமீஸ்வரர்கோவிலில் இருந்து குதிரை விடும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து சக்திகரகம் எடுத்து வந்து பதாள அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை ராமமூர்த்தி, முகில் ஆகியோர் செய்திருந்தனர்.