உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சரஸ்வதி குளம் தூய்மைப்படுத்தும் பணி!

திருநள்ளார் சரஸ்வதி குளம் தூய்மைப்படுத்தும் பணி!

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் உள்ள சரஸ்வதி குளத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும், வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.கோவிலை சுற்றி மூன்று குளங்களில்  பக்தர்கள் வசதிக்கா நளம் குளத்தில் புனரமைக்கப்பட்டு பல்வேறு வசதிகளுடன் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் சனீஸ்வர பகவான் கோவிலை சுற்றி சரஸ்வதி தீர்த்தம்,கோவில் நுழைவுவாயில் முன்பு பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த மூன்று தீர்த்தங்களை கோவில் நிர்வாகம் பராமரித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மேலும் சரஸ்வதி குளத்தில் சுற்றி கான்கிரீட் அமைக்க குளத்தை தூய்மைப்படுத்த தண்ணீரை வெளியோற்றப்பட்டது. இதுக்குறித்து கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில். திருநள்ளார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பில் சரஸ்வதி குளம் மற்றும் தெற்கு வீதியில் சரஸ்வதி குளம் அருகில் பக்தர்கள் வசதிக்காக கியூ வரிசைகள் அமைக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.மேலும் பக்தர்களுக்காக குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பணிகள் நடைபெறுவதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !