திருத்தணி கிருத்திகை திருவிழாவுக்கு1,300 போலீசார் பாதுகாப்பு
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை திருவிழாவில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக, 1,300 போலீசாரை ஈடுபடுத்த, விழா முன்னேற்பாடு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை வரும், 6ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்வளத் துறை அமைச்சர் ரமணா, ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.இக்கூட்டத்தில், பக்தர்களின் பாதுகாப்புக்காக, தீயணைப்பு மற்றும் காவல் துறையில் இருந்து, 1,300 பேரை நியமிக்க வேண்டும்.கோவிலில் சுகாதாரத்தை பேண, நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில், 900 பேரை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.