உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலத்தாழனூரில் கும்பாபிஷேக விழா

மேலத்தாழனூரில் கும்பாபிஷேக விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மேலத்தாழனூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.மேலத்தாழனூர் கிராமத்தில் உள்ள மன்னார் சுவாமி உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.முன்னதாக காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தது.தொடர்ந்து 10:30 மணிக்கு மூலகலசங்கள் மற்றும் கர்ப்பகிரகத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !