உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பாலாபிஷேகம்!

பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பாலாபிஷேகம்!

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி 2 ம் வெள்ளியை முன்னிட்டு பாலாபிஷேகம் நடந்தது. முத்தாலம்மன் கோயிலில் ஆடிவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி 2 ம் வெள்ளியையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பலரும் அம்மனுக்கு கூழ் காய்ச்சி வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !