ஆனந்தமுத்துமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :3725 days ago
புதுச்சேரி: பிள்ளைத் தோட்டம் ஆனந்தமுத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் ஆனந்த முத்துமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண் பக்தர்கள் பொங்கலிட்டு தரிசனம் செய்தனர்.வரும் 6ம் தேதி காலை 8.30 மணிக்கு தேர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.