ஓசூரம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
மப்பேடு: மப்பேடு ஊராட்சியில் உள்ள, இரண்டு ஓசூரம்மன் கோவில்களில், வரும் ஆக., 2ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட மப்பேடு, விஸ்வநாதகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வரும், ஆக., 2ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக, இரு கோவில்களிலும் நேற்று மாலை, காப்பு கட்டுதலுடன் தீமிதி திருவிழா துவங்கியது. தொடர்ந்து தினமும் மாலையில், மலர் அலங்காரத்தில் ஓசூரம்மன் வீதியுலா நடைபெறும். திருவிழா முக்கிய நிகழ்ச்சி தீமிதி திருவிழாவை முன்னிட்டு, ஆக., 1ம் தேதி, இரவு 12:00 மணிக்கு, அக்னி குண்டம் எடுத்து, மலர் அலங்காரத்தில் ஓசூரம்மன் வீதியுலா நடைபெறும். பின், மறுநாள் ஆக., 2ம் தேதி, காலை 11:00 மணிக்கு, அங்கபிரதட்சணம் மற்றும் வேப்பிலை நேர்த்திக் கடனும் நடைபெறும். அதன்பின், மாலை 6:00 மணிக்கு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்களின் தீமிதி திருவிழாவும், அதை தொடர்ந்து, அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.