உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் வேம்பு திருக்கல்யாண உற்சவ விழா!

முத்துமாரியம்மன் கோவிலில் வேம்பு திருக்கல்யாண உற்சவ விழா!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் முத்துமாரியம்மன் கோவிலில்  13ம் ஆண்டு அரசு வேம்பு திருக்கல்யாண உற்சவ  விழா  நடந்தது. வீரமுடையாநத்தம் கிராமத்தில் அருள்பாலிக்கும் முத்துமாரியம்மனுக்கு  ஆண்டுதோறும்  ஆடி மாதத்தில்  திருக்கல்யாண உற்சவ  விழா நடைபெறுவது வழக்கம். நேற்று ஆடிமாத 10 ஆம் நாள் சுவாதி நட்சத்திரத்தில் கோவில் வளாகத்தில் நாகத்தம்மன் சன்னதி அருகில் உள்ள  அரசமரம், வேப்பங்கன்றுக்கு திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு யாகங்கள், மந்திரங்கள், மங்கள வாத்தியத்துடன் காலை 9.40 மணிக்கு ÷ காவில் அர்ச்சகர் பாலாஜிஐயர்  வேப்பங்கன்றுக்கு தாலிகட்டினார். மூலவர் முத்துமாரிம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்,  கோவில் பரிவார தெ ய்வங்களான விஞாயகர், குரு தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, ராகுகால துர்க்கை, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், ஐயப்பன் ஆகிய  தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவர் முத்துமாரியம்மனுக்கு மகா தீபாராதணை நடந்தது. இதில், 100க்கும் ÷ மற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனின் அருளை பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !