உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!

உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி ஸ்ரீகனகவள்ளி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் 39ம் ஆண்டு மகோற்சவ விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, செங்குறிச்சி கனகவள்ளி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெரு மாள் கோவிலில் 39ம் ஆண்டு லட்சார்ச்சனை கருடசேவை மகோற்சவ விழா நடந்தது.  நேற்று முன்தினம் காலை 7:30 மணி, மாலை 4:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை வழிபாடு நடந் தது. நேற்று காலை 10:30 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியும், ரகுவீர பட்டாச் சாரியாரின் உபன்யாசம் நடந்தது. அதனை தொடர்ந்து 11:30 மணிக்கு  விசேஷ திருமஞ்சனம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு கருட சேவையில் சுவாமி வீதியுலா நடந்தது.  இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா  சவுந்தரராஜ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !