பரங்கிப்பேட்டை ஐயனார் சுவாமி வீதியுலா!
ADDED :3840 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில் உள்ள ஐயனார் சுவாமி இன்று (27ம் தேதி) வீதியுலா காட்சி நடக்கிறது. அதைö யாட்டி ஊரணி பொங்கல், அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கடஸ்தாபனம், அபிஷேக ஆராதனை, பூஜை, மகா தீபாரதனை நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு விநாயகர், உத்திராபதியார், மாரியம்மன், கோட்டை இடி வீரனார் புடைசூழ ஐயனார் சுவாமி வீதியுலா காட்சி நடக்கிறது. 31ம் தேதி சாகை வார்த்தல், 1ம் தேதி பத்ம விஜயம், 2ம் தேதி சம்பூர்ண ராமாயணம், 7ம் தேதிமுதல் 9ம் தேதி வரை காத்தவரயான் கதை, 10ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.