கந்தக்கோட்டத்தில் 108 சங்காபிஷேகம்
ADDED :5208 days ago
சென்னை: கந்தக்கோட்டம் முத்துகுமார சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா 10ம் ஆண்டு நிறைவையொட்டி, நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது.சென்னை, பூங்கா நகரில் கந்தக்கோட்டம் என அழைக்கப்படும், முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் நடந்து, 10 ஆண்டுகள் நாளை நிறைவு பெறுகிறது. இதை நினைவுக்கூரும் வகையில், மூலவருக்கு நேற்று காலை 108 சங்காபிஷேகமும், தொடர்ந்து நைவேத்தியத்துடன் தீப, தூப ஆராதனை நடந்தது.இரவு 7 மணிக்கு முத்துக்குமரன், தங்க மயில் வாகனத்தில், நான்கு மாட வீதிகளில் வலம் வரும் உற்சவம் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் முத்துக்குமரனை வழிபட்டனர். இதற் கான ஏற்பாடுகளை, சீனியர் அறங்காவலர் முத்து உள்ளிட்டோர் செய்துள்ளனர்.