நடனபாதேஸ்வர கோவிலில் ரத உற்சவம்
ADDED :5296 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ரத உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவில் சவாமி வீதியுலா நடந்து வருகிறது. சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து ஷஷ்த தாளாம்பிகை சமேதரா ய்நடனபாதேஸ்வரர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். நிர்வாக அதிகாரி லீமாள், சரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.