ஜெயமங்கள விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு!
ADDED :3840 days ago
புதுச்சத்திரம்: வில்லியநல்லூர் ஜெயமங்கள விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் ஜெயமங்கள விநாயகர் கோவிலில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து 48 நாட்கள் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வந்தது. மண்டலாபிஷேகத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 9.00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.