உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்டையாம்பட்டியில் திருத்தல திருவிழா

ஆட்டையாம்பட்டியில் திருத்தல திருவிழா

சேலம்: ஆட்டையாம்பட்டி, சவுரிபாளையத்தில் மரிய மதலேனாள் திருத்தலத் திருவிழா துவங்கியுள்ளது. ஆட்டையாம்பட்டி அருகே மதியம்பட்டி சவுரிபாளையத்தில், புனித மரிய மதலேனாள் திருவிழா , மறை மாவட்ட முதன்மை குரு மரியசூசை தலைமையில் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நவநாள் திருப்பலி மறையுரை நடக்கிறது. 21ம் தேதி அருட்பணி எட்வர்ட் ராஜன் மற்றும் தேவசகாயம் ஆகியோரின் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. மரிய ஜோசப், ஸ்டீபன் சொரூபன், அமல்மகிமை, பிரகாஷ்ராஜ் ஆகியோர் மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி நடத்துகின்றனர். இரவு 11 மணிக்கு வேண்டுதல் தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 22ம் தேதி திருப்பலி ஆயருக்கு வரவேற்பு, திருவிழா எட்வர்டு ஃபிரான்சிஸ் தலைமையில் நடக்கிறது. பரிந்துரை செப வழிபாடு வர்கீஸ் ஜான்சன் நடத்துகிறார். இரவு குணமளிக்கும் வழிபாடு நடக்கிது. இரவு 12 மணிக்கு புனிதயின் ஆடம்பர தேர் பவனி வருகிறது. 23ம் தேதி கொடியிறக்கம் செய்து நன்றி திருப்பலி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !