முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா
ADDED :3765 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள இந்திராநகர் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடந்தன. பெண்கள் முளைப்பாரிகளை கோயிலில் வைத்து வழிபாடு செய்த ஊர்வலமாக தூக்கி சென்று தண்ணீரில் கரைத்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள நோக்கன்கோட்டை, பனிதிவயல், உப்பூர் சத்திரம், தும்படைக்காகோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களிலும் முளைப்பாரி விழா நடைபெற்றது.