காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவில் ஆடி திருவிழா
ADDED :3765 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ரங்கசாமி குளம் அருகில் உள்ள, கன்னியம்மன் கோவில் ஆடி திருவிழா கோலாகலமாக துவங்கியது.காஞ்சிபுரம், ரங்கசாமி குளம் அருகில், கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை, கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தன.நேற்று பிற்பகல் 2:00 மணியளவில், கோவிலில் இருந்து மாகாளியம்மன் கோவிலுக்கு சுவாமி புறப்பாடு நடந்தது.அங்கு பொங்கல் வைத்து பகுதிவாசிகள் வழிபட்டனர்.இன்று காலை 8:00 மணியளவில், திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளம் பகுதியில் இருந்து கன்னியம்மன், மாரியம்மன் புறப்பாடு நடைபெறும். மாலை 6:30 மணிஅளவில், விஜய கிராமணி தெருவில், தீமிதி திருவிழா நடைபெற இருக்கிறது. இரவு 8:00 மணிஅளவில் சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது.