உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரல் சேர்மன் அருணாச்சலசுவாமி கோயில் ஆடி அமாவாசை : ஆக., 5 ல் கொடியேற்றம்

ஏரல் சேர்மன் அருணாச்சலசுவாமி கோயில் ஆடி அமாவாசை : ஆக., 5 ல் கொடியேற்றம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில், ஆடித்திருவிழா ஆக., 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஆக., 16 ல் நிறைவு பெறுகிறது. ஏரலில் உள்ள சேர்மன் அருணச்சலசுவாமி கோயில் ஆடி, அமாவாசைத்திருவிழா பிரசித்தி பெற்றது. தென் மாவட்டங்களில் இருந்து இக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆடி அமாவாசைத்திருவிழா ஆக., 5 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் இரவு சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 5 ல் இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாச்சலசுவாமி கோயில் வலம் வருதல். 6ல் திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரம், ஆக., 7 ல் முல்லை சப்பரத்தில் சதாசிவ அலங்காரம், ஆக., 8 ல் பூங்குயில் சப்பரத்தில், நடராஜர் அலங்காரம், 9 ல் சேர்ம விநாயகர் திருவீதியுலா, இரவு 8 மணிக்கு திருப்புன்னை சப்பரத்தில் நவநீத கிருஷ்ணன் அலங்காரம், முக்கிய விழாவான ஆடி அமாவாசை ஆக., 14 ல் நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வலம் வருதல், பின் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு இலுமிச்சை வேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆக., 16 ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து ஏரலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கபடவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !