வீரமாத்தி அம்மனுக்கு 18ல் சிறப்பு அபிஷேகம்
ADDED :3759 days ago
ஈரோடு:ஈரோடு அடுத்த வைராபாளையம் பகுதியில் காவிரிக்கரையில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாகராஜ வீர கணபதி, வீரப்பன், வீரமாத்தி அம்மன், சப்த கன்னிமார்கள், சந்தன கருப்பு மூர்த்திகளுக்கும் ஆடி, 18ஐ முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்க உள்ளது.இதனை முன்னிட்டு, 17ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. வரும், 3ம் தேதி காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், 12 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. வரும், 4ம் தேதி மறுபூஜை நடக்கிறது. 14ம் தேதி மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது.