ஸ்ரீரங்கத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :3759 days ago
திருச்சி:மழை பெய்ய வேண்டி ஸ்ரீரங்கத்தில் வருண ஜெப யாகம் நேற்று நடந்தது. தமிழகத்தில் கடந்த, மூன்று ஆண்டுகளாக போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு வரும், 9 ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.மேலும், நிலத்தடி நீர் உயரவும், சம்பா சாகுபடிக்கு முழு அளவு தண்ணீர் கிடைக்கவும், திருச்சி அருகே ஸ்ரீரங்கம் அம்மா மண்டப்பத்தில் நேற்று காலை பாரதிய கிசான் சங்கம் சார்பில் பர்ஜன்ய (வருண) சாந்தி ஜெப யாகம் நடந்தது. இதில், புரோகிதர்கள் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து யாகத்தில் ஈடுப்பட்டனர். மேலும், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பாரதி கிசான் சங்க நிர்வாகிகள் யாகத்தில் பங்கேற்றனர்.