உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி பெருக்கு விழா முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை!

ஆடி பெருக்கு விழா முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை!

காரிமங்கலம்:காரிமங்கலம் மலைக்கோவிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், இன்று நடக்கிறது.காரிமங்கலம் அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. * காவேரிப்பட்டணம் அடுத்த, பெண்ணெஸ்வரர் மடம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்த வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் உள்ள தேசநாதேஸ்வரர் கோவில், அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் மகாலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உட்பட மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்வாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !