உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஜெயமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம் : திண்டிவனம், ஜெயபுரத்திலுள்ள அன்னை ஜெய முத்துமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஜெயபுரம் அன்னை ஜெயமுத்துமாரியம்மன் கோவில் 49ம் ஆண்டு, ஆடிப் பெருவிழா மற்றும் வசந்த உற்சவம், புதிய பிராகர தேவதைகளான ஜெய லிங்கேஸ்வரர், ஜெய விக்ன ஆஞ்சநேயர், ஜெய சொர்ணா ஆகாஷண கால பைரவருக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை 10:00 மணியளவில் நடந்தது. கோவில் கலசங்களில், சீனுவாச சுவாமிகள், நாகராஜ் குருக்கள் ஆகியோர் புதனி நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து வரும் 4ம் தேதி காலை 8:30 மணிக்கு பூங்கரக ஊர்வலம் மற்றும் சாகை வார்த்தல், இரவு 8:30 மணிக்கு வான வேடிக்ககையுடன் சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !