மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
3689 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
3689 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
3689 days ago
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் நேற்று முன்தினம் விடையற்றி உற்சவம் முன்னிட்டு அம்மையார் வீதியுலா நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மாங்கனி திருவிழா நடக்கும். இத்திருவிழா கடந்த மாதம்29ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. மறுநாள் காரைக்கால் அம்மையார் அன்று அழைக்கப்படும் புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணமும், முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல் நடந்தது.சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதி உலா வரும்போது பக்தர்கள் தன் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. ஒரு மாதம் தொடர்ந்து நடக்கும் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் விடையற்றி உற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பிச்சாண்டவர், அம்மாள், வள்ளி தெய்வாணை சமேதராக முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.பின் இரவு அமையார் சிறப்பு அலங்கரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையாறை வழிப்பட்டனர்.
3689 days ago
3689 days ago
3689 days ago