உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடிக்கு கூடுதல் பஸ்கள் தேவை: பக்தர்கள் வேண்டுகோள்!

இருக்கன்குடிக்கு கூடுதல் பஸ்கள் தேவை: பக்தர்கள் வேண்டுகோள்!

காரியாபட்டி:காரியாபட்டியிலிருந்து இருக்கன்குடி கோயிலுக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். திருவிழா, வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நேர்த்திக் கடன் செலுத்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். காரியாபட்டி மற்றும் சுற்று பகுதி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கும், அந்த வழியில் உள்ள கோட்டூர் குருசாமி கோயிலுக்கும் சென்று வருவது வழக்கம். காரியாபட்டி பகுதி பக்தர்கள் இக்கோயில்களுக்கு சென்று வர விருதுநகர், அருப்புக்கோட்டை சென்று பல்வேறு பஸ்கள் மாறி செல்லும் நிலை உள்ளது. மதுரையிலிருந்து தனியார் பஸ்கள் குறிப்பிட்ட சில நேரத்திற்கு மட்டும் வருவதால் இதனை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. காத்திருந்து அந்த பஸ்களில் சென்றாலும், பல்வேறு ஊர்களை சுற்றி செல்வதால் பல மணி நேரம் ஆவதுடன் பணம், நேரம் விரையமாகிறது. உரிய நேரத்திற்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியவில்லை. இவர்களது நலனை கருத்தில் கொண்டு காரியாபட்டியிலிருந்து வரலொட்டி, பாலவநத்தம், கோட்டூர் வழியாக இருக்கன்குடிக்கு பஸ் வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !