உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை திருவிழா

முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை திருவிழா

கவுரிவாக்கம், சாந்தி நகரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில், வரும் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை, ஆடிக்கொடை திருவிழா நடைபெற உள்ளது. அய்யா ஸ்ரீமன் நாராயண சாமிக்கு பால்முறை திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் துவங்கும். 10ம் தேதி காலை 6:00 மணிக்கு, காப்பு கட்டுதல், 11ம் தேதி காலை 9:30 மணிக்கு, 108 கலச அபிஷேக ருத்ரஹோமம் நடைபெறும்.வரும் 13ம் தேதி, ஐகோர்ட் மகாராஜா என்ற சுடலைமாடன் கோவிலில், இரவு 9:00 மணிக்கு, காப்பு கட்டுதல் மற்றும் கூத்து நடைபெறும்.14ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு, ஐகோர்ட் மகாராஜாவுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு புஷ்ப அலங்காரம், மகாதீபாராதனை, பரிவார தேவதைக்கு சிறப்பு பூஜை, சாம கொடை மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !