சேலம் ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :3733 days ago
சேலம் : சேலம், ஜாகீர் அம்மாபாளையம் ராஜகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்த மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சேலம், ஜாகீர்அம்மாபாளையம் ராஜகாளியம்மன் கோவிலில் ஆடிப் பண்டிகையில், நேற்று முன்தினம் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இரவில், அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்தி வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.நேற்று காலையில், மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் அம்மையும், அப்பனும் திருமண கோலத்தில், திருவீதி உலா நடந்தது.இன்று காலையில், ராஜகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.